The Indian Times

அனிருத்தை கல்யாணம் செய்ய விருப்பமாக உள்ளது:பிரபல பாடகி பகிரங்க பேட்டி

நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் கால் வைத்தவர்.முதல் படத்திலேயே இவர் இசையில் உருவாகிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.பல மொழிகளிலும் அந்த பாடலை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.அந்த அளவிற்கு முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

Advertisement

தற்போது இவர் பிரபல ஹிந்தி பாடகியான ஜோனிட்டா காந்தியுடன் பாடல்களை பாடி வருகிறார்.இவர்கள் கூட்டணியில் செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் ஹிட் அடித்தது,அதனை தொடர்ந்து அரபிக்குத்து பாடலும் மாபெரும் ஹிட் அடித்தது.பின்னர் அண்மையில் வெளியாகிய டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி என்ற பாடலும் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அனிருத் தான் இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலிலாவது ஜோனிட்டா உடன் பாடி விடுகிறார்.அந்த பாடலும் மாபெரும் ஹிட் அடித்து விடுகிறது.தற்போது அனிருத்துக்கு பெண் பார்க்கும் வேலை நடந்து வருகிறது.இதுகுறித்து பல் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் அண்மையில் பாடகி ஜோனிட்டா காந்தி அளித்த பேட்டி ஒன்றில்,சூர்யா, ரண்பீர் சிங், அனிருத் இந்த மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு அனிருத் என பதில் அளித்துள்ளார் மேலும் அதற்கு காரணமாக மீதமுள்ளவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது,திருமணம் ஆகாமல் இருப்பது இவர் ஒருவர் தான் அதனால் தான் இவரை திருமணம் செய்ய விருப்பம் என கூறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி தற்போது தீயை போல பரவி வருகிறது.இதனை கண்ட நெட்டிசன்கள் பாட்டு பாடியே உஷார் பண்ணிடீங்களே அனிருத் என கேலி செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in