Vijay tv ராமர் ஒரு அரசு அதிகாரியா? என்னங்க சொல்லுறீங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர் ராமர்.இந்த நிகழ்ச்சியில் உள்ள உள்ள சிரிச்சா போச்சு என்ற சுற்றில் சக கலைஞருடன் வந்து நகைச்சுவை செய்து மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.பின்னர் பிரபல நிகழ்ச்சி ஒன்றை கலாய்த்து இவர் செய்த நகைச்சுவை மாபெரும் வைரலாகியது.அன்று முதல் தற்போதுவரை ராமரை என்னம்மா ராமர் என்று தான் அழைத்து வருகிறார்கள்.மக்களை மகிழ்விக்கும் மகத்தான வேலையை ராமர் செய்வதால் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

Vijay tv ராமர் ஒரு அரசு அதிகாரியா? என்னங்க சொல்லுறீங்க 1

விளம்பரம்

ஆரம்பத்தில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்து இன்று இவர் இல்லாத நிகழ்ச்சியே தற்போது இல்லை என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டார்.தற்போது வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றார்.இவர் மனப்பாடம் பண்ணிட்டு வரும் வசனங்களை மறந்து இவர் அந்த இடத்திலேயே பேசும் வசனம் தான் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.அந்த அளவிற்கு நகைச்சுவை மன்னனாக விஜய் தொலைக்காட்சியில் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

Vijay tv ராமர் ஒரு அரசு அதிகாரியா? என்னங்க சொல்லுறீங்க 2

விளம்பரம்

தற்போது இவர் ஒரு அரசு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் என்பது மட்டுமே இவரது ரசிகர்களுக்கு கூடுதல் அளவு தெரிந்த தகவல்.தற்போது இவர் அரசு அதிகாரி என்ற தகவலை மதுரை எம்பி வெளியிட்டுள்ளார்.ராமருடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்ட எம்பி வெங்கடேசன் ,இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன். மகிழ்ச்சி .என தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment