The Indian Times

டாக்டர் கதாநாயகி ப்ரியங்கா அருள் மோகனுக்கு இந்த தமிழ் நடிகரை தான் ரொம்ப பிடிக்குமாம்..

கேங் லீடர் என்ற நானியின் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் பிரியங்கா அருள் மோகன்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் மொழியில் அறிமுகம் ஆக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்தி டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் இவருக்கு என ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது அந்தளவிற்கு இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார் பிரியங்கா.இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,உங்களுக்கு எந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும் என கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் கூறிய அவர் எனக்கு எல்லாரையும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை யாருக்கு தான் பிடிக்காது,சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர்.ப்ரியங்காவின் இந்த பதில் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,இந்த கால இளம் நடிகைகளுக்கு ஆங்கில கதாநாயகர்கள் பிடிக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்கும் கூறியது ரஜினிகாந்தின் திறமையை பற்றி தெரிவிக்கிறது

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in