The Indian Times

30 சீசன் ஆனாலும் நீ திருந்தமாட்ட..சிவாங்கி செய்த காரியத்தினால் கடுப்பாகிய சிவகார்த்திகேயன் |cook with comali

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் கால் தடம் பதித்து வெற்றிநடைபோடுகிறது குக் வித் கோமாளி.குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர்கள் கோமாளிகளாக அடிக்கும் அலப்பறை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே சமையல் போர் நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

கடந்த வார நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா டான் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்டு உள்ளனர்.இதில் சிவாங்கி ஸ்ருதிக்காவிற்கு ஜோடியாக சேர்ந்து சமைத்துள்ளார்.ஸ்ருதிக்கா பிரிஞ் இலை கேட்க அதற்கு சிவாங்கி பிரிஞ்சல் எடுத்து வந்துள்ளார்.இதனை சிவகார்த்திகேயனிடம் கூறவே சிவாங்கியை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன்,30 சீசன் ஆனாலும் நீ திருந்தமாட்டஎன நகைச்சுவையாக கூறியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் வயிறுகுலுங்க சிரித்து வருகின்றனர்.

https://youtu.be/_sBu0naOUr4

Embed video credits: vijay television 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in