Jawaan-காப்பியா..மாட்டிக்கொண்ட அட்லீ..வளைத்துபிடித்து வசைபாடும் நெட்டிசன்கள்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ

கட்டாயம் படிக்கவும்  இளையத்திலகம் பிரபுவுக்கு மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய ரோபோசங்கர்

Jawaan-காப்பியா..மாட்டிக்கொண்ட அட்லீ..வளைத்துபிடித்து வசைபாடும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்பு வேலைகள் உடனே தொடங்கப்பட்டது.ஆனால் கொரோனா நிலவரம் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு வந்த நிலையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

DARKMAN

விளம்பரம்

இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியாகியது.இதில் ஷாருக்கான் முகமெல்லாம் பேண்டேஜ் சுற்றிக்கொண்டு இருப்பது போல் இருந்தது.தற்போது ஜவான் படம் ஆனது 1990 ஆம் ஆண்டு Liam Neeson ஹீரோவாக நடித்த Darkman படத்தின் காப்பி தான் என கூறி அந்த படத்திலும் கதாநாயகன் முகமெல்லாம் துணி சுற்றி மறைத்து இருக்கும் புகைப்படத்தினையும் ஜவான் புகைப்படத்தினையும் சேர்த்து வைத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ஏற்கனவே அட்லீ எடுத்த சில காட்சிகள் பிற படங்களில் இருந்து எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஜவான் படத்தினையும் அட்லீ காப்பியடித்துள்ளதாக கூறுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் பூங்குழலியின் செம்ம மாடர்ன் புகைப்படங்கள்

Jawaan-காப்பியா..மாட்டிக்கொண்ட அட்லீ..வளைத்துபிடித்து வசைபாடும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment