குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாய்…வெளியாகியது நயன்தாராவின் O2 TRAILER

நடிகை நயன்தாராவிற்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.அதன்படி ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஒரே நாயகி நயன்தாராதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாய்...வெளியாகியது நயன்தாராவின் O2 TRAILER 1

விளம்பரம்

நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ட்ரீம் வாரியார் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாய்...வெளியாகியது நயன்தாராவின் O2 TRAILER 2

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்பொழுது அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.ட்ரைலரில் மகனின் சிகிச்சைக்காக நயன்தாரா செல்லும் பேருந்து ஆனது விபத்தில் சிக்கி புதைந்து விடுகிறது.அங்கிருந்து எப்படி உயிருடன் வெளியேறி மகனை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தினை கதை என்பதை தெளிவாக ட்ரைலரை காணும் பொழுது உணர முடிகிறது.இந்த ட்ரைலர் படத்தின் ஆவலை அதிகரித்துள்ளது.ஜூன் 17 ஆம் தேதி இப்படம் நேரிடையாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.ட்ரைலருக்கு நயன்தாரா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : DISNEY HOT STAR TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment