The Indian Times

கேரளாவில் விஸ்வரூபம் எடுத்த விக்ரம்…எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்த உலகநாயகன்

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.படத்தினை பார்த்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் படங்கள் சரியாக ஓடவில்லை அதனை தற்போது விக்ரம் நிவர்த்தி செய்துள்ளது.இறங்கிய தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளது விக்ரம் என தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது வரை படத்திற்கு டிக்கெட்டுகள் அணைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ்புல் ஆகி ஓடிவருகிறது .அந்த அளவிற்கு உலகநாயகன் படம் பெரும் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது .இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் ரசிகர்கள் கேட்க கேட்க பத்தாமல் மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர்.அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது இப்படம்,திரையரங்குகளில் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்துள்ளது இந்த பாடல்.தற்போது இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Advertisement

தயாரிப்பாளராகவும் நடிகர் ஆகவும் விக்ரம் வெற்றியினை உலகநாயகன் கொண்டாடி வருகிறார்.விக்ரம் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை செய்து வருகிறது.கேட்கும் இடமெல்லாம் கோடிகளில் வசூலைக்குவித்துக்கொண்டு இருக்கிறது விக்ரம் என கூறுகின்றனர்.அந்தளவிற்கு உலகநாயகன் வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்.தமிழகத்தில் மட்டும் விக்ரம் படம் இதுவரை 100 கோடி வசூலிசை செய்துள்ளது.இனி வரும் காலங்களிலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அதே சமயம் மலையாளத்திலும் வசூலை வெளுத்து வாங்கி வருகிறது விக்ரம்.கேரளாவில் மட்டும் ரூ.25கோடிக்கு மேல் வசூலை அள்ளிக்குவித்துள்ளது,இதுவரை எந்த நடிகர் படமும் மலையாளத்தில் இத்தகைய வசூலை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in