The Indian Times

விஜயுடன் இணையும் மகேஷ் பாபு…அப்போ கொலமாஸ் தான்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரது படங்கள் கோடிகளில் தற்போது வசூலாகி வருவதால் இயக்குனரை விட்டுவிட்டு இவர் படத்தினை தயாரிக்க தயாரிப்பாளர்கள் இவரின் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.அந்தளவிற்கு தளபதியின் படமானது வசூலில் சாதனை படைத்தது வருகிறது.அண்மையில் தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இருப்பினும் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூலில் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது,தமன் இசையமைக்கும் இப்படத்தினை தில் ராஜு தயாரித்து வருகிறார்,இயக்குனர் வம்சி முன்னதாக நடிகர் கார்த்தியை வைத்து தோழா என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தவர்.அதன்பின் தளபதி விஜயை வைத்து மீண்டும் இப்படத்தினை இயக்கி வருகிறார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்,சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மும்முரமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது அதேபோல இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

Advertisement

இப்படத்தில் இயக்குனர் வம்சி உடன் கொண்ட நட்பின் காரணமாக நடிகர் மகேஷ் பாபு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே விஜய்க்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் தற்போது மகேஷ் பாபுவும் படத்தில் வருகிறார் என்றால் தெலுங்கு ரசிகர்களுக்கு இரண்டு விருந்தாக அமைந்து விட்டது இப்படம்.இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாக என தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in