ராம் சரணை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ்….

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் ஆக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்..மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,விக்ரம் படத்தினை இயக்கினார்

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

ராம் சரணை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ்.... 1

விளம்பரம்

இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.வசூலை அள்ளி குவித்து வருகிறது.கதையின் நாயகனாகவும்,தயாரிப்பாளர் ஆகவும் கமல்ஹாசன் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பரிசாக கார் அளித்தார் அதேபோல் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் இருசக்கரவ வாகனத்தினை பரிசாக அளித்தார் கமல்.அதுமட்டுமின்றி படத்தில் இறுதியில் வந்து அசத்திய சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்தார்.அதன் விலை மட்டும் 46 லட்சம் என சொல்லப்படுகிறது.இந்நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வரும் நிலையில் அண்மையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கதை ஒன்றை கூறியுள்ளேன் விரைவில் ராம் சரணை இயக்க இருப்பதாக தெரிவித்தார்.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

ராம் சரணை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ்.... 2

விளம்பரம்

ராம் சரணை வைத்து இவர் இயக்கும் படம் விக்ரம் படத்தின் ஒரு பாகம் என்றும்,அதில் கமல்ஹாசன் பேரன் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கலாம் என்று சில தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது,மேலும் சூர்யாவும்,ராம் சரணும் அடுத்த விக்ரம் பாகத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் லோகேஷ் அடுத்து விஜய் படத்தினை இயக்க இருக்கிறார் அதன்பின்னர் கைதி 2 படத்தினையும் இயக்க உள்ளார்.ஏற்கனவே கைதி 2 படத்தின் வேலைகள் தொடங்கி விட்டதாக அறிவித்திருந்த நிலையில் ,இந்த மூன்று படங்களில் முதலில் எந்த படத்தினை இவர் கையிலெடுப்பார் என்பது தெரியவில்லை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இந்நிலையில் ராம் சரணை இயக்க இருப்பதாக லோகேஷ் அறிவித்ததை தொடர்ந்து சில ரசிகர்கள் தமிழில் ஹிட் கொடுத்துவிட்டு மீண்டும் தெலுங்கு பக்கம் செல்வது ஏன்,தமிழ் படங்களை உயர்த்த நடவடிக்கை எடுங்கள் நல்ல படங்களை எடுங்கள் என கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment