யானை வெளியாகும் தேதி தள்ளி போகிறதா?குழப்பத்தில் ரசிகர்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தையை போல சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.சில படங்கள் ஓரளவு ஓடினாலும் சில படங்கள் தோல்வியை தான் அருண் விஜய்க்கு பெற்றுக்கொடுத்தது.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் முயற்சியை மட்டும் கைவிடாமல் சினிமாவில் சாதிக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

யானை வெளியாகும் தேதி தள்ளி போகிறதா?குழப்பத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு பொருத்தமாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படம் அருண்விஜய் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

யானை வெளியாகும் தேதி தள்ளி போகிறதா?குழப்பத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது படம் ஜூன் 17 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காரணம் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் மேலும் ஜூன் 17 ஆம் தேதியில் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் விஷேசம் என்ற படமும் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் பெரிய பட்ஜெட்டில் யானை படம் எடுக்கப்பட்டுள்ளதால்,ஜூன் 17ல் வெளியானால் குறைந்த அளவு திரையரங்கு தான் கிடைக்கும் என்பதால் படத்தினை ஜூலை 1 ஆம் தேதி வெளியிட விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தற்போது இப்படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகுமா என்ற குழப்பம் அருண் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment