இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா,மம்முட்டி…அனல் பறக்கப்போகுது அப்போ

முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் இயக்குனர் முத்தையா.இவரின் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மண் மனம் மாறாத மண் வாசனையில் அடிதடியுடன் படங்களை எடுப்பதில் இவரை தமிழ் சினிமாவில் அடித்துக்கொள்ள ஆளே இல்லை.2013 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரை வைத்து குட்டிப்புலி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகியவர் தான் முத்தையா .இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்து முன்னணி இயக்குனராக அவதாரம் எடுத்தார் முத்தையா.அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தினை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.இப்படம் இவரை உயரத்திற்கு அழைத்து சென்றது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா,மம்முட்டி...அனல் பறக்கப்போகுது அப்போ 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து வரிசையாக மண் வாசனையில் படத்தினை எடுத்து வருகிறார் முத்தையா.அதன்படி தற்போது மீண்டும் நடிகர் கார்த்தியை வைத்து இவர் விருமன் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இப்படத்தில் கதாநாயகியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் அறிமுகம் ஆகியுள்ளார்.,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவு கண்ணால என்ற பாடல் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து முத்தையா நடிகர் ஆர்யாவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா,மம்முட்டி...அனல் பறக்கப்போகுது அப்போ 2

விளம்பரம்

நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் கேப்டன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்திற்கு பிறகு இவர் முத்தையா இயக்கம் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மகாமுனி படத்தினை இயக்கிய இயக்குனர் சாந்தகுமார் படம் ஒன்றிலும் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.இதில் இவர் எந்த படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்பது இன்னும் தகவல் வெளியாகவில்லை.முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் மம்முட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,அதற்கான பேச்சுவார்த்தை மம்முட்டியிடம் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா,மம்முட்டி...அனல் பறக்கப்போகுது அப்போ 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment