The Indian Times

அக்காவும் ஓர் அன்னையே..அக்கா சாய் பல்லவி மடியில் படுத்து உறங்கும் அவரது தங்கை

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

Advertisement

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவரது தங்கை பூஜா கண்ணன் இவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்,அண்மையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகிய சித்திரை செவ்வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்நிலையில் நடிகை சாய்பல்லவி
தனது தங்கை பூஜாவை மடியில் படுக்க வைத்து தூங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அக்கா தங்கை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

https://youtu.be/BfL-wOAN-ys

Embed video credits ; behindwoodstv

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in