The Indian Times

SUN TV தொகுப்பாளினி அகல்யா திருமண வரவேற்பு:குத்தாட்டம் போட்ட KPY பாலா

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் அகல்யா.கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.மேலும் சின்னத்திரையில் பல சீரியல்களிலும் அகல்யா வெங்கடேசன் நடித்துள்ளார்.மேலும் இவர் ஜோதிகா நடிப்பில் வெளியாகிய ராட்சசி, கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த தேவராட்டம்,சசிகுமாரின் ராஜவம்சம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் காவல் ஆய்வாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.அதன்படி இவரின் திருமணம் இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இன்று (மே-4) திருவண்ணாமலையில் நடைபெற்றது.இன்று சென்னையில் VJ அகல்யாவின் வரவேற்பு நடைபெற்று வருகிறது.இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு அகல்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் KPY பாலா மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பாலா ரசிகர்கள் அண்ணன் வேறே லெவெலில் ஆடுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.பலரும் தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://youtu.be/8VpsjbQmEQw

Embed video credits : Behindwoods tv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in