The Indian Times

விசித்திரமானவன் இந்த விசித்திரன்…வெளியாகியது Visithiran movie trailer

பாலா இயக்கத்தில் வெளியாகிய தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆர்.கே.சுரேஷ்.இப்படத்தில் வில்லன் ஆக நடித்து மிரட்டியிருப்பார்.இதனை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகிய மருது படத்தில் ரோலெக்ஸ் பாண்டியனாக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

Advertisement

தற்போது இவர் படங்களை தயாரித்து வருகிறார்.மேலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் இவர்.தற்போது இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் விசித்திரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.இப்படம் வருகிற மே 6 ஆம் தேதி வெளியாக உள்ளது

Advertisement

இப்படத்தில் சுரேஷ் உடன் மது ஷாலினி,பகவதி பெருமாள்,இளவரசு,அணில் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை இயக்குனர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான  B ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலருக்கு இவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in